கிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்
திண்டுக்கல்லில் கிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திண்டுக்கல்
தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் சங்கம் சார்பில் திண்டுக்கல் ஆர்.டி.ஓ. அலுவலக வளாகத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் ராஜரத்தினம் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் முருகன், பொருளாளர் மகேஷ்வரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைமை நிலைய செயலாளர்கள் லோகநாதன், சைமன் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.
ஆர்ப்பாட்டத்தில் கிராம நிர்வாக அலுவலர் கணேசனுக்கு வழங்கப்பட்ட பணிமாறுதல் உத்தரவை திரும்ப பெற வேண்டும் என்று வலியுறுத்தியும், ஆர்.டி.ஓ. பிரேம்குமாரின் ஊழியர் விரோத போக்கை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் சங்க நிர்வாகிகள் ஏராளமானோர் பங்கேற்றனர்.
Related Tags :
Next Story