கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தினர் 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சேத்துப்பட்டு,
சேத்துப்பட்டு தாலுகா அலுவலகத்தில் தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தினர் 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட போராட்ட குழு தலைவர் ரகுராமன். தலைமை தாங்கினார். வட்ட தலைவர் மோகன்ராஜ், செயலாளர் ஜான்சன், பொருளாளர் ராஜசேகர், ஆகியோர் முன்னிலை வகித்தனர். இணை செயலாளர் கருமலை வரவேற்றார்.
2018-ம் ஆண்டு 19 நாட்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்ட கிராம நிர்வாக அலுவலர்களுக்கு மற்ற தாலுகாக்களில் சம்பளம் வழங்கப்பட்ட நிலையில் சேத்துப்பட்டு தாலுகாவில் வழங்காததை கண்டித்தும், ஜமாபந்தி முடிந்து 2 மாதங்கள் ஆகியும் அதற்கான படி வழங்காததை கண்டித்தும் இவை உள்பட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கிராம நிர்வாக அலுவலர்கள் கோஷமிட்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் வட்ட செயலாளர் ஜான்சன், கண்டன உரையாற்றினார். இதில் சேத்துப்பட்டு தாலுகாவில் உள்ள 44 கிராம நிர்வாக அலுவலர்கள் 44 பேர்கலந்து கொண்டனர். முடிவில் துணை செயலாளர் சதீஷ்குமார் நன்றி கூறினார்.