கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுக்கோட்டை
பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், நிறுத்தி வைக்கப்பட்ட ஈட்டிய விடுப்பு சரண்டரை வழங்க வேண்டும், பட்டப்படிப்பு ஊக்க ஊதிய உயர்வு வழங்க வேண்டும், கூடுதல் பொறுப்பூதியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் சார்பில் புதுக்கோட்டை மாவட்டத்தில் தாசில்தார் அலுவலகங்கள் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. புதுக்கோட்டையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட அமைப்பு செயலாளர் வசந்தகுமார் தலைமை தாங்கினார். இதில் சங்கத்தை சேர்ந்த கிராம நிர்வாக அலுவலர்கள் கலந்து கொண்டனர். மேலும் கோரிக்கைகள் தொடர்பாக கண்டன கோஷங்களை எழுப்பினர். இதேபோல் அறந்தாங்கி, கறம்பக்குடி, இலுப்பூர், விராலிமலை, மணமேல்குடி, ஆலங்குடி தாசில்தார் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
Related Tags :
Next Story