4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கிராம நிர்வாக அலுவலர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கிராம நிர்வாக அலுவலர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி தாலுகா அலுவலகம் முன்பு தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் சார்பில் தமிழக அரசு வாழ்வாதார கோரிக்கைகளை நிறைவேற்றிட வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

திருவள்ளூர்

சங்கத்தின் திருத்தணி வட்டாரத் தலைவர் வினோத் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் சி.பி.எஸ்.திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், பட்டப்படிப்பு ஊக்க ஊதிய உயர்வு வழங்க வேண்டும், கூடுதல் பொறுப்பூதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட 4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினர்.

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி தாசில்தார் அலுவலகம் முன்பு கிராம நிர்வாக அலுவலர்கள் சார்பில் நேற்று மாலை கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற கிராம நிர்வாக அலுவலர்கள் தமிழ்நாடு அரசு கவனத்தை ஈர்க்கும் வகையிலும் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையிலும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

திருவள்ளூர் தாசில்தார் அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் கார்த்திகேயன் தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் பிரகாஷ் பாலாஜி முன்னிலை வகித்தார். நிர்வாகிகள் விஜயகாந்த், மிதுன், கல்யாணசுந்தரி, லோகநாதன், ராதிகா, பானு ஆகியோர் கோரிக்கைகளை வலியுத்தி பேசினர்.


Next Story