வாலிபர், மாதர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
விழுப்புரத்தில் வாலிபர், மாதர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
விழுப்புரம்
விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகம் எதிரே நேற்று மாலை இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் மற்றும் மாதர் சங்கத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மல்யுத்த வீராங்கனைகள் மீது பாலியல் வன்முறை நடத்திய பா.ஜ.க. எம்.பி. பிரிஜ்பூஷன் சரண்சிங்கை கைது செய்ய வலியுறுத்தியும், மல்யுத்த வீராங்கனைகள் மீதான டெல்லி காவல்துறை தாக்குதலை கண்டித்தும் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஜனநாயக வாலிபர் சங்க மாவட்ட தலைவர் பிரகாஷ் தலைமை தாங்கினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் குமார், மாதர் சங்க மாநில துணைச்செயலாளர் கீதா, வாலிபர் சங்க மாவட்ட செயலாளர் அறிவழகன், மாவட்ட பொருளாளர் தேவநாதன், மாதர் சங்க மாவட்ட தலைவர் தமிழ்ச்செல்வி, மாணவர் சங்க மாவட்ட செயலாளர் ஹரிகிருஷ்ணன் ஆகியோர் கலந்துகொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.