ரெயில்களை தனியாருக்கு விற்பதை கண்டித்து ஆர்ப்பாட்டம்
ரெயில்களை தனியாருக்கு விற்பதை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது.
தாமரைக்குளம்:
அரியலூர் ரெயில்வே கோட்ட பொறியாளர் அலுவலகம் முன்பு தெற்கு ரெயில்வே மஸ்தூர் யூனியன் தொழிற்சங்கத்தின் சார்பில் கருப்பு தின ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பாரத் கவுரவ் என்ற பெயரில் சுற்றுலா ெரயில்களை தனியாருக்கு விற்பதை கண்டித்து நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தின்போது, ெரயிலை தனியார் மயமாக்குவதால் கட்டணம் இருமடங்காக உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் அதிகம் பாதிக்கப்படுவது பயணிகள்தான். மக்களின் வரிப்பணத்தில் தண்டவாளங்கள், ெரயில் நிலையங்கள் ஆகியவற்றை அமைத்து தனியாருக்கு தாரை வார்ப்பது கண்டனத்துக்குரியது என்று தெரிவித்தனர். மேலும் வேலை வாய்ப்புகள் பறிபோகும் என்பதை உணர்ந்து பொதுமக்களும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தனர். ஆர்ப்பாட்டத்திற்கு கிளை செயலாளர் செல்வகுமார் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் வேல்முருகன் முன்னிலை வகித்தார். உதவி செயலாளர்கள் ரகு, கார்த்தி, கண்ணன், அருண்குமார் உள்ளிட்ட பொறுப்பாளர்கள் மற்றும் சங்கத்தை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டு கோஷங்களை எழுப்பினர்.