100 நாள் வேலை வழங்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்


100 நாள் வேலை வழங்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 15 Sept 2023 12:15 AM IST (Updated: 15 Sept 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

திட்டச்சேரி பேரூராட்சி அலுவலகம் முன்பு பேரூராட்சி பகுதிக்கு 100 நாள் வேலை வழங்க வலியுறுத்தி அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

நாகப்பட்டினம்

திட்டச்சேரி:

திட்டச்சேரி பேரூராட்சி அலுவலகம் முன்பு பேரூராட்சி பகுதிக்கு 100 நாள் வேலை வழங்க வலியுறுத்தி அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாதர் சங்க ஒன்றிய தலைவர் ஜோஸ்பின் ராணி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் லதா, பொருளாளர் சுபாதேவி ஆகியோர் முன்னிலை வகித்தனர். 100 நாள் வேலை கேட்டு விண்ணப்பித்த அனைவருக்கும் உடனடியாக வேலை வழங்கிட வேண்டும். 100 நாள் வேலை திட்டத்தை பேரூராட்சிக்கும், நகராட்சிக்கும் விரிவுபடுத்தி அதற்கான சிறப்பு சட்டத்தை கொண்டு வர வேண்டும். இடமற்ற விவசாயக்கூலி தொழிலாளர்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும். மக்களுக்கு சுகாதார சீர்கேட்டை விளைவிக்கக்கூடிய ப.கொந்தகை இந்திராநகர் சுடுகாட்டை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோஷங்கள் எழுப்பினர். இதில் ஒன்றியக்குழு உறுப்பினர் துர்கா மற்றும் மாதர் சங்க நிர்வாகிகள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாதர் சங்க பொருளாளர் செல்வகுமாரி நன்றி கூறினார்.


Next Story