வருவாய் ஆய்வாளரை தாக்கியவர்கள் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்


வருவாய் ஆய்வாளரை தாக்கியவர்கள் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்
x

வருவாய் ஆய்வாளரை தாக்கியவர்களை குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.

திருச்சி

துறையூர்:

துறையூர் தாலுகா அலுவலகம் முன்பு வருவாய் அலுவலர்கள் சங்கம், கிராம நிர்வாக அலுவலர்கள் முன்னேற்ற சங்கம், கிராம உதவியாளர் சங்கம், நில அளவை துறை சங்கம், வருவாய்த்துறை நேரடி நியமன அலுவலர் சங்கம் ஆகியவை சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு தாசில்தார் ராஜா தலைமை தாங்கினார். துறையூர், உப்பிலியபுரம் பகுதிகளை சேர்ந்த சங்க நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். துறையூர் அருகே நரசிங்கபுரத்தில் மண் கடத்தலை தடுக்கச் சென்ற வருவாய் ஆய்வாளர் பிரபாகரன் மீது தாக்குதல் நடத்திய நரசிங்கபுரம் ஊராட்சி மன்ற தலைவர் மகேஸ்வரன் உள்ளிட்ட 4 பேர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க கோரியும், அதிகபட்சமாக குண்டர் சட்டத்தில் கைது செய்ய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தின்போது, வருவாய் ஆய்வாளரை தாக்கியவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், ஆய்வுக்காக செல்லும்போது பாதுகாப்பு வழங்க வலியுறுத்தியும், மண் கடத்தல் கொள்ளையர்கள் மீது நடவடிக்கை வேண்டும் என்பது உள்ளிட்ட கோஷங்களை எழுப்பினர்.


Next Story