டாக்டர் நியமிக்கக் கோரி ஆர்ப்பாட்டம்
காட்பாடி ரெயில்வே மருத்துவமனைக்கு டாக்டர் நியமிக்கக் கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
வேலூர்
காட்பாடி ரெயில் நிலையம் மிகப்பழமை வாய்ந்த ரெயில் நிலையம் ஆகும். இங்கு ரெயில்வே மருத்துவமனை உள்ளது. ஆனால் நீண்டகாலமாக டாக்டர் இல்லை என கூறப்படுகிறது. டாக்டர் இல்லாததால் பயணிகள், பொதுமக்கள் மற்றும் ரெயில் நிலையத்தில் பணிபுரியும் ஊழியர்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
இந்த நிலையில் ரெயில்வே மருத்துவமனையில் உடனடியாக நிரந்தரமாக டாக்டரை நியமிக்க வேண்டும் என்று அகில இந்திய எஸ்.சி.எஸ்.டி. ரெயில்வே தொழிற்சங்கம் சார்பில் காட்பாடி ரெயில் நிலைய வளாகத்தில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்தில் அகில இந்திய எஸ்.சி. எஸ்.டி. தொழிற்சங்க காட்பாடி செயலாளர் கோபிநாத், மோகனசுந்தரி, விஜி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story