பழங்குடியினருக்கு வீட்டு மனைபட்டா வழங்கக் கோரி ஆர்ப்பாட்டம்


பழங்குடியினருக்கு வீட்டு மனைபட்டா வழங்கக் கோரி ஆர்ப்பாட்டம்
x

்பழங்குடியினருக்கு வீட்டு மனைபட்டா வழங்கக் கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ராணிப்பேட்டை

கலவை தாலுகாவில் முதியோர் பென்சனை நிறுத்தியதை கண்டித்தும், வீட்டு மனைபட்டா வழங்காததை கண்டித்தும் அகில இந்திய விவசாய சங்கத்தினர் தாலுகா அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் செய்தனர். இந்த ஆர்ப்பாட்டத்துக்கு கலைவாணி தலைமை தாங்கினார். சின்னபையன் முன்னில வகித்தார். விவசாய தொழிலாளர் சங்க மாநில செயலாளர் முத்து ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து சிறப்புரை ஆற்றினார்.

மேல்நெல்லிபகுதியில் உள்ள பழங்குடியினருக்கு வீட்டு மனைபட்டா, குடிநீர் வழங்காததை கண்டித்தும், 100 நாள் வேலை திட்டத்தை 150 நாட்களாக மாற்றக் கோரியும், கலவை தாலுகாவில் ஆதார் அலுவலகம் மற்றும் இ-சேவை மையம் தொடங்க வேண்டியும் கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் விவசாய சங்க செயலாளர் ரகுபதி, தலைவர் கிட்டு, பொருளாளர் வெங்கடேசன் மற்றும் 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.


Next Story