பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த கோரி ஆர்ப்பாட்டம்


பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த கோரி ஆர்ப்பாட்டம்
x

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த கோரி விருதுநகரில் ஆர்ப்பாட்டம் நடைெபற்றது.

விருதுநகர்


பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த கோரி விருதுநகரில் ஆர்ப்பாட்டம் நடைெபற்றது.

ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதிய சங்கத்தின் விருதுநகர் மாவட்ட கிளையின் சார்பில் விருதுநகர் நகராட்சி அலுவலகம் முன்பு 4 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

விருதுநகர் வட்ட கிளை தலைவர் ஜெகதீசன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு சங்கங்களின் நிர்வாகிகள் வாழ்த்தி பேசினர். மாவட்ட பொருளாளர் மாரியப்பன் சிறப்புரையாற்றினார். கிளைச் செயலாளர் டேவிட் நன்றி கூறினார். குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ. 7,850 வழங்க வேண்டும். தேர்தல் வாக்குறுதிபடி புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.

சிறப்பு ஓய்வூதியம்

சத்துணவு அங்கன்வாடி ஓய்வூதியர்கள், ஓய்வு பெற்ற ஊராட்சி செயலர், வனகாவலர்கள், வருவாய் கிராம ஊழியர்கள், கிராமப்புற நூலகர்கள் போன்ற சிறப்பு ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு மாத ஓய்வூதியம் ரூ.7850 விரைந்து வழங்க வேண்டும்.

பணி ஓய்வு பெற்ற தொகுப்பூதிய ஊழியர்கள் அனைவருக்கும் குடும்ப ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் குறித்து ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.


Next Story