புதிய மருத்துவ காப்பீடு திட்டத்தை அமல்படுத்தக்கோரி ஆர்ப்பாட்டம்
புதிய மருத்துவ காப்பீடு திட்டத்தை அமல்படுத்தக்கோரி ஓய்வு பெற்ற அலுவலர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அரியலூர்
அரியலூரில் அண்ணா சிலை அருகில் மாவட்ட ஓய்வு பெற்ற அலுவலர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் முருகேசன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் மகாலிங்கம் முன்னிலை வகித்தார். மாவட்ட துணை தலைவர் ரவிச்சந்திரன் வரவேற்று பேசினார். ஆர்ப்பாட்டம் குறித்து சங்க நிர்வாகிகள் கூறுகையில், 3 சதவீத அகவிலைப்படியை உடனடியாக வழங்க வேண்டும். 70 வயது முடிந்த ஓய்வூதியர்கள், குடும்ப ஓய்வூதியர்களுக்கு 10 சதவீதம் கூடுதல் தொகை வழங்க வேண்டும். புதிய மருத்துவ காப்பீடு திட்டத்தை அமல்படுத்த வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது என்றனர்.
Related Tags :
Next Story