நெல் குவிண்டாலுக்கு ரூ.3 ஆயிரம் வழங்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்


நெல் குவிண்டாலுக்கு ரூ.3 ஆயிரம் வழங்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்
x

வத்திராயிருப்பில் நெல் குவிண்டாலுக்கு ரூ.3 ஆயிரம் வழங்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

விருதுநகர்

வத்திராயிருப்பு,

வத்திராயிருப்பில் நெல் குவிண்டாலுக்கு ரூ.3 ஆயிரம் வழங்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கொப்பரை தேங்காயம்

வத்திராயிருப்பு முத்தாலம்மன் பஜாரில் நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ. 3,000 நிர்ணயம் செய்ய வேண்டும். தேங்காய் கொப்பரை கிலோவிற்கு ரூ.150 வழங்க வேண்டும். உரம், பூச்சி மருந்து விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தினை விவசாயத்தோடு இணைக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து விவசாயிகள் சங்க கூட்டமைப்பு சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டம்

ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு விவசாய சங்க மாவட்ட செயலாளர் சவுந்தரபாண்டியன் தலைமை தாங்கினார். இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தேசிய குழு உறுப்பினர் ராமசாமி, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் லிங்கம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் அர்ஜுனன். முன்னாள் எம்.எல்.ஏ. பொன்னுபாண்டியன், விவசாய சங்க மாவட்ட தலைவர் விஜயமுருகன், தாலுகா செயலாளர் கோவிந்தன் மற்றும் பலர் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகள் குறித்து கோஷங்கள் எழுப்பினர்.


Next Story