பொது பாடத்திட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்


பொது பாடத்திட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்
x

பொது பாடத்திட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் செய்தனர்.

கரூர்

மாதிரி பாடத்திட்டம் என்னும் பொது பாடத்திட்டம் தமிழக அரசால் அமல்படுத்தப்பட உள்ளது. தமிழ்நாடு உயர்கல்வி நிறுவனங்கள் மீது திணிக்கப்பட்டு வரும் பொது பாடத்திட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி நேற்று கரூர் அரசு கலைக்கல்லூரியில் தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் கழகத்தின் கரூர் கிளை சார்பில் கோரிக்கை அட்டை அணிந்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு தலைவர் பிரபாகரன் தலைமை தாங்கினார். செயலாளர் பார்த்திபன் முன்னிலை வகித்தார். இதில் கரூர் கிளை உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


Next Story