மின் கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்


மின் கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்
x

மின் கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.

கரூர்

தமிழக அரசு மின் கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் கரூர்- கோவை ரோட்டில் உள்ள மின்வாரிய அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மாநகர செயலாளர் தண்டபாணி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் ஜோதிபாசு, மாவட்ட குழு உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். பின்னர் கோரிக்கைகளை வலியுறுத்தி மின்வாரிய அதிகாரிகளிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.


Next Story