அடிப்படை வசதிகள் கேட்டு ஆர்ப்பாட்டம்
அடிப்படை வசதிகள் கேட்டு ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஜெயங்கொண்டம்:
ஜெயங்கொண்டம் நகராட்சிக்கு உட்பட்ட கீழக்குடியிருப்பு கிராமத்தில் அடிப்படை வசதிகள் கேட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு கிளை செயலாளர் மகேந்திரன் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் வெங்கடாசலம் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார். மாவட்ட செயலாளர் இளங்கோவன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் மணிவேல் உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்து பேசினர். ஒத்த தெருவில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி தார் சாலை அமைக்க வேண்டும். புதுப்பாதை ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். புதுத்தெருவில் சிமெண்டு சாலை, மின்விளக்கு கம்பம் அமைக்க வேண்டும். கூட்டுறவு வங்கியில் நகைக்கடன் தள்ளுபடி செய்யப்பட்ட அனைவருக்கும் நகைகளை உடனடியாக திருப்பி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.