பஸ் வசதி கேட்டு ஆர்ப்பாட்டம்


பஸ் வசதி கேட்டு ஆர்ப்பாட்டம்
x

தேனியில் பஸ் வசதி கேட்டு நாட்டுமாடு நலச்சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

தேனி

தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு நாட்டுமாடு நலச்சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு துணைத்தலைவர் ஜெயமணி தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில், தேனி அருகே சொக்கத்தேவன்பட்டி, அம்மாபட்டி, தடமலைநாயக்கன்பட்டி, அம்மாபுரம், சிந்தால்பட்டி, பின்னத்தேவன்பட்டி ஆகிய கிராமங்களுக்கு மாணவ, மாணவிகளின் நலன் கருதி அரசு பஸ் இயக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கோஷமிட்டனர். இதில் சங்க தலைவர் கலைவாணன், செயலாளர் ஆதி மற்றும் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.


Next Story