கவுரவ விரிவுரையாளர்களை பணி நிரந்தரம் செய்யக்கோரி ஆர்ப்பாட்டம்
மயிலாடுதுறையில் கவுரவ விரிவுரையாளர்களை பணி நிரந்தரம் செய்யக்கோரி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
மயிலாடுதுறை
மயிலாடுதுறை தருமபுரம் ஞானாம்பிகை அரசினர் மகளிர் கலைக்கல்லூரி முன்பு பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு கலை, அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரி கவுரவ விரிவுரையாளர்கள் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.ஆர்ப்பாட்டத்திற்கு சங்க பொறுப்பாளர் கனிமொழி தலைமை தாங்கினார். அனைத்து கவுரவ விரிவுரையாளர்களையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும். சம வேலைக்கு தகுந்தாற்போல் சம ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன.
Related Tags :
Next Story