ஆலங்குடியில் ஆர்ப்பாட்டம்
ஆலங்குடியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அகில இந்திய விவசாய கிராமப்புற தொழிலாளர் சங்கம் மற்றும் இந்திய கம்யூனிஸ்டு (மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட்) கட்சி சார்பில் ஆலங்குடி வடகாடு முக்கத்தில் பெருந்திரள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் பாஸ்கரன் தலைமை தாங்கினார். ரவிச்சந்திரன், கணேசன், சேசு வளத்தான் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் வளத்தான், சத்தியமூர்த்தி, மாநில தலைவர் பாலசுந்தரம் ஆகியோர் சிறப்புரையாற்றினர். ஆர்ப்பாட்டத்தில், தேசிய ஊரக வேலை திட்டத்தில் டிஜிட்டல் வருகை பதிவேட்டை ரத்து செய்ய வேண்டும். பேரூராட்சி பகுதிகளுக்கும் திட்டத்தை விரிவுபடுத்த வேண்டும். ஆண்டுக்கு 200 நாட்கள் வேலை, நாளுக்கு கூலியாக ரூ.600 உயர்த்திடு. கோவில், மடம், அறக்கட்டளை, அரசு புறம்போக்கு நிலங்களில் 5 ஆண்டுகளுக்கு மேலாக குடியிருக்கும் ஏழை குடும்பங்களுக்கு அந்த இடங்களை முறைப்படுத்தி அவர்களுக்கு கொடுக்க ஆணையிடு. கியாஸ் சிலிண்டர் விலையை ரூ.400 ஆக குறைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். முடிவில் சித்ராதேவி நன்றி கூறினார்.