ஓ.பன்னீர்செல்வத்திற்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம்
ஓ.பன்னீர்செல்வத்திற்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம்
சென்னையில் நடைபெற்ற அ.தி.மு.க. பொதுக்குழுவில் ஓ. பன்னீர்செல்வத்தை அவமரியாதை செய்ததை கண்டித்தும், அவருக்கு ஆதரவு தெரிவித்தும் சிவகங்கை சண்முகராஜா கலையரங்கம் அருகில் அ.தி.மு.க. மாநில மாணவரணி துணை செயலாளர் வழக்கறிஞருமான வி.எம்.ஆசைத்தம்பி மற்றும் தாயமங்கலம் அய்யாசாமி ஆகியோர் தலைமையிலும், மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் அசோகன், மாநில ஜெயலலிதா பேரவை இணை செயலாளர் சின்னையா, கவுன்சிலர் ராமசாமி ஆகியோர் முன்னிலையிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆா்ப்பாட்டத்தில் தேவகோட்டை முன்னாள் நகர மன்ற தலைவர் சுமித்ரா ரவிக்குமார், மாவட்ட வழக்கறிஞர் அணி இணைச் செயலாளர் சுந்தரபாண்டியன், மாணவர் அணி இணைச் செயலாளர்கள் நாகராஜன், கார்த்திகைசாமி, துணைச் செயலாளர் மாரிமுத்து, தீயனூர் பாலா, மாவட்ட ஜெயலலிதா பேரவை துணைச் செயலாளர் பாலா, நகர இளைஞரணி செயலாளர் ஜெயச்சந்திரன், மகளிர் அணி கயல்விழி, முடிக்கரை சமையன், ஒன்றிய கவுன்சிலர் கீர்த்தனா கனகராஜ், மற்றும் கணேஷ்பாபு உள்பட பலர் கலந்து கொண்டனர்.