பேட்டையில் ஆர்ப்பாட்டம்


பேட்டையில் ஆர்ப்பாட்டம்
x

பேட்டையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

திருநெல்வேலி

பேட்டை:

பேட்டையில் இந்து தேசிய கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். நிறுவனர் எஸ்.எஸ்.மணி தலைமை தாங்கினார். மாநில அமைப்புச் செயலாளர் சங்கர் முன்னிலை வகித்தார். இந்து மகா சபா மாவட்ட தலைவர் இசக்கி ராஜா வரவேற்றார். இந்து மக்கள் கட்சி மாவட்ட தலைவர் மாரியப்பன், மாநில துணைத்தலைவர் உடையார், பாரதிய ஜனதா கட்சி மேற்கு மண்டல தலைவர் லாலா பாரதி ஆகியோர் பேசினர். தமிழகத்தில் விலைவாசி உயர்வை கண்டித்தும், பேட்டை இந்து முன்னணி நகரத் தலைவர் குரு மகேஷ் அய்யப்பனை தாக்கியதை கண்டித்தும் மற்றும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தில் பெண்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story