ஒப்பந்த செவிலியர்கள்ஆர்ப்பாட்டம்


ஒப்பந்த செவிலியர்கள்ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 16 Dec 2022 12:15 AM IST (Updated: 16 Dec 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி கலெக்டர் அலுவலகம் முன்பு பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி எம்.ஆர்.பி.ஒப்பந்த செவிலியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தூத்துக்குடி

தூத்துக்குடி கலெக்டர் அலுவலகம் முன்பு பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி எம்.ஆர்.பி.ஒப்பந்த செவிலியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ஆர்ப்பாட்டம்

தூத்துக்குடி மாவட்ட எம்.ஆர்.பி. ஒப்பந்த செவிலியர்கள் நேற்று மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் இன்பென்டா தலைமை தாங்கினார். அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் முருகன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார். வருவாய்த்துறை அலுவலர் சங்க மாவட்ட செயலாளர் ஞானராஜ், அரசு ஊழியர் சங்க வட்டத் தலைவர் பீட்டர், சத்துணவு ஊழியர் சங்க மாநில துணைத்தலைவர் கணேசன் ஆகியோர் பேசினர்.

பணி நிரந்தரம்

ஆர்ப்பாட்டத்தில் மருத்துவ பணியாளர் தேர்வு வாரியத்தின் போட்டி தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட்ட ஒப்பந்த செவிலியர்கள் தமிழகம் முழுவதும் அரசு ஆஸ்பத்திரிகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணியாற்றி வருகிறோம். தொகுப்பூதியத்தில் பணியமர்த்தப்பட்ட செவிலியர்கள் 2 ஆண்டுகள் பணி நிறைவு பெற்ற பிறகு நிரந்தரம் செய்யப்படுவார்கள் என்று பணி நியமன ஆணை வழங்கப்பட்டது. ஆனால் 7 ஆண்டுகள் கடந்த நிலையில் 4 ஆயிரம் பேர் மட்டுமே நிரந்தரம் செய்யப்பட்டு உள்ளனர். மீதம் உள்ள 4 ஆயிரத்து 500 பேர் ஒப்பந்த முறையில் பணியாற்றி வருகின்றனர். ஆகையால் அனைவரையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும், ஒப்பந்த செவிலியர்களுக்கு சமவேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.

ஆர்ப்பாட்டத்தில் சங்க உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டனர். மாநில இணை செயலாளர் விக்னேஷ் நன்றி கூறினார்.


Next Story