பயிர் பாதுகாப்பு செயல்விளக்கம்
வாழை விவசாயிகளுக்கு பயிர் பாதுகாப்பு குறித்து மாணவிகள் செயல் விளக்கம் அளித்தனர்.
தேனி
குள்ளப்புரம் வேளாண் தொழில்நுட்ப கல்லூரி மாணவிகள் காவ்யா, லஷ்மிபிரதா, ராகசுவேதா, தனலட்சுமி, சுபாஷினி, ரித்தன்யா, சந்தோஷினி, சினேகா, ரம்யா, கிருத்திகா, பெல்சி, மேனகா ஆகியோர் கொண்ட குழுவினர் கிராம தங்கல் திட்டத்தின் கீழ் உத்தமபாளையம் பகுதியில் தங்கி பணி அனுபவ பயிற்சி பெற்று வருகின்றனர். விவசாயிகளை சந்தித்து கலந்துரையாடி, விவசாயிகளுக்கு பயிர் சாகுபடி மற்றும் பயிர் பாதுகாப்பு தொழில்நுட்பங்கள் குறித்து செயல்விளக்கம் அளித்து வருகின்றனர். அதன்படி தம்மிநாயக்கன்பட்டி கிராமத்தில் வாழை விவசாயிகளுக்கு பயிர் பாதுகாப்பு குறித்த செயல்விளக்க நிகழ்ச்சி நடந்தது. அப்போது வாழை மரத்தில் தார்களுக்கு கம்புகளால் முட்டுக்கொடுத்து மரங்களை பாதுகாத்தல் மற்றும் சாகுபடி தொழில்நுட்பங்கள் குறித்து மாணவிகள் விளக்கம் அளித்தனர். அப்போது செயல் விளக்கம் செய்து காண்பித்தனர்.
Related Tags :
Next Story