மின்வாரிய தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு ஆர்ப்பாட்டம்


மின்வாரிய தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு ஆர்ப்பாட்டம்
x

தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு

ஈரோடு

தமிழ்நாடு மின்வாரிய தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில், ஈரோடு ஈ.வி.என். ரோட்டில் உள்ள மின்வாரிய தலைமை பொறியாளர் அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு மின்வாரிய பொறியாளர்கள் சங்க மாநில தலைவர் இந்திராணி தலைமை தாங்கினார்.

நிதி நிலையை காரணம் கூறி, அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் பல்வேறு சலுகைகள், நலத்திட்டங்கள் வழங்கக்கூடாது என வாரியம் கூறுவதை கைவிட்டு, அனைத்து சலுகையும் வழங்க வேண்டும். மின்வாரிய பணியாளர்கள் இதுவரை பெற்று வந்த பஞ்சப்படி, வீட்டுக்கடன், வாகனக்கடன், கல்விக்கடன் போன்றவற்றை தொடர்ந்து வழங்க வேண்டும். மின் வாரியத்தில் காலியாக உள்ள 52 ஆயிரம் பணியிடங்களில், கடந்த 5 ஆண்டுகளாக கேங்மேன் பணி தவிர மற்றவை நிரப்பப்படவில்லை. மின் கணக்கீட்டு பிரிவில் மட்டும் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள் உள்ளதால், அதனை உடனடியாக நிரப்ப வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட பல்வேறு சங்கங்களின் நிர்வாகிகள் கோரிக்கைகள் குறித்து கோஷங்கள் எழுப்பினார்கள்.

--------------


Related Tags :
Next Story