அனைத்து துறை ஓய்வூதியர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்


அனைத்து துறை ஓய்வூதியர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்
x

ஜெயங்கொண்டத்தில் அனைத்து துறை ஓய்வூதியர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அரியலூர்

தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கம் சார்பில் ஜெயங்கொண்டம் காந்தி பூங்கா அருகே நேற்று கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அரியலூர் வட்ட தலைவர் சுந்தர்ராஜன் தலைமை தாங்கினார். வட்ட துணை தலைவர் தண்டபாணி, இணை செயலாளர் ஆனந்த கிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்ட செயலாளர் தட்சிணாமூர்த்தி கோரிக்கைகளை விளக்கி பேசினார்.

ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் தி.மு.க. அரசின் தேர்தல் கால வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும். 70 வயது நிறைவடைந்த அனைத்து ஓய்வூதியதாரர்களுக்கும் 10 சதவீதம் கூடுதல் ஓய்வூதியம் வழங்க வேண்டும். குறைந்தபட்ச ஓய்வூதியம் பெறும் சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியர்கள், ஊராட்சி எழுத்தர்கள், வருவாய் கிராம ஊழியர்கள், வனத்துறை தொகுப்பு ஊதிய ஊழியர்கள் அனைவருக்கும் ரூ.7,850 என மாத ஓய்வூதியம் வழங்க வேண்டும். மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் செலவுத்தொகை வழங்காமல் இருக்கும் அனைத்து மனுக்களுக்கும் விரைவாக செலவுத்தொகை வழங்க வேண்டும். மனுக்களின் நிலவரத்தை தெரிந்து கொள்ள டிராக்கிங் சிஸ்டம் அமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.


Next Story