பா.ஜனதா சார்பில் ஆர்ப்பாட்டம்
கிருஷ்ணகிரி
காஞ்சீபுரம் மாவட்டத்தில் பா.ஜனதா பட்டியல் அணியின் மாநில பொருளாளர் கொலை செய்யப்பட்டார். இதை கண்டித்து கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட பா.ஜனதா பட்டியல் அணி சார்பில் புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள அண்ணாசிலை எதிரில் ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. மாவட்ட தலைவர் சிவபிரகாசம் தலைமை தாங்கினார். எஸ்.சி. பிரிவு மாவட்டத் தலைவர் ரவி முன்னிலை வகித்தார். பொதுச் செயலாளர்கள் அர்ச்சுணன், கோவிந்தராஜ், மாவட்ட துணைத் தலைவர் ராஜேந்திரன், மாவட்ட செயலாளர்கள் மன்னன் சிவா, முருகேசன், எஸ்.சி., அணி மாவட்ட பார்வையாளர் திருமலை பெருமாள், பொதுச் செயலாளர் திருமுகம், உள்பட பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் பா.ஜனதா பட்டியல் அணி மாநில பொருளாளர் சங்கர் படுகொலையை கண்டித்தும், சட்டம் ஒழுங்கை பாதுகாக்க தவறியதாக தி.மு.க., அரசைக் கண்டித்தும் கோஷங்கள் எழுப்பப்பட்டன.
Next Story