இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம்
திருப்பத்தூரில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
திருப்பத்தூர்
திருப்பத்தூர்
திருப்பத்தூர் மாவட்ட இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் திருப்பத்தூர் தாலுகா அலுவலகம் எதிரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நகர செயலாளர் முருகன் தலைமை தாங்கினார்.
ஒன்றிய செயலாளர் அண்ணாமலை, குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தை மாவட்ட செயலாளர் எம்.சுந்தரேசன் தொடங்கி வைத்து பேசினார்.
ஆர்ப்பாட்டத்தில் மணிப்பூர் மாநிலத்தில் கலவரத்தால் பாதிக்கப்பட்ட முகாம்களில் உள்ள மக்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்றும், மணிப்பூர் மாநிலத்தின் அமைதியை ஏற்படுத்த தவறிய மத்திய மாநில பா.ஜ.க. அரசு கண்டித்தும் கோஷங்கள் எழுப்பினர்.
இதில் மாவட்ட துணை செயலாளர் நந்தி, மாவட்ட பொருளாளர் வேணுகோபால், பெருமாள், தேவதாஸ், முருகன், செந்தில் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
முடிவில் நகர துணை செயலாளர் வெங்கடேசன் நன்றி கூறினார்.
Related Tags :
Next Story