இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம்


இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம்
x

செங்கத்தில் நெடுஞ்சாலை துறையை கண்டித்து இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

திருவண்ணாமலை

செங்கம்

செங்கத்தில் நெடுஞ்சாலை துறையை கண்டித்து இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் நெடுஞ்சாலை துறை அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. வட்ட செயலாளர் சர்தார் தலைமை தாங்கினார்.

மாவட்ட செயலாளர் தங்கராஜ், மாவட்ட நிர்வாகக்குழு வெ.முத்தையன், பெ.அன்பு உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் செங்கத்தில் பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் சகாயமாதா பள்ளி தெரு முன்பு சாலை நடுவில் உள்ள தடுப்புச்சுவரில் 10 மீட்டர் அளவில் தடுப்புச் சுவரை அகற்ற வேண்டும்.

ஆக்கிரமிக்கப்பட்டுள்ள நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான இடங்களை தனி நபர்கள் வாடகைக்கு விடப்படுவது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நெடுஞ்சாலையில் உள்ள தூர்ந்து போன கால்வாய்களை மீண்டும் ஏற்படுத்தி சிறுபாலங்கள் அமைக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.


Next Story