சென்னையில் ஊராட்சி பணியாளர்கள் கூட்டமைப்பு சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்
சென்னையில் ஊராட்சி பணியாளர்கள் கூட்டமைப்பு சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது .
சென்னை,
சென்னையில் ஊராட்சி பணியாளர்கள் கூட்டமைப்பு சங்கம் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது. சைதாப்பேட்டையில் உள்ள பனகல் மாளிகை முன்பு இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இதில் 1200 க்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்றனர்.
இதில் ஆர்பாட்டக்காரார்கள்,10 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றும் ஊராட்சி பணியாளர்களுக்கு மாதாந்திர மதிப்பூதியமாக ரூ.3000 வழங்கவும் ,மேலும் அவர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் உள்ளிட்ட 7 கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் செய்தனர்.
Related Tags :
Next Story