ஓய்வூதியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்
திருப்பத்தூரில் ஓய்வூதியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கம் திருப்பத்தூர் வட்டக்கிளை சார்பில் திருப்பத்தூர் தாலுகா அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.
வட்ட தலைவர் வி.சாம்ராஜ் தலைமை தாங்கினார். ஏ.கோபால், இஸ்மாயில்கான், வின்சென்ட்தாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்ட இணைச் செயலாளர் எ.வேலு வரவேற்றார். வட்ட செயலாளர் எம்.ஏ.ஞானசேகரன் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார்.
ஆர்ப்பாட்டத்தில் ஓய்வுப்பெற்ற அனைத்துத்துறை அரசு ஊழியர்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.7,850 வழங்க வேண்டும்.
புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினார்கள்.
இதில் மாவட்ட செயலாளர் ஏ.ஞானசேகரன், மாவட்ட தலைவர் ராசு, மாநில துணைத்தலைவர் ஜி.பாண்டியன், உள்பட பலர் கலந்து கொண்டனர்.
முடிவில் வட்ட பொருளாளர் பொ.வெங்கடசாமி நன்றி கூறினார்.