சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்


சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்
x

சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

புதுக்கோட்டை

தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் சார்பில் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் திருவரங்குளம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்றது. இதற்கு ஒன்றிய தலைவர் ஜெயலலிதா தலைமை தாங்கினார். அரசு ஊழியர் சங்க மாவட்ட துணைத்தலைவர் கருப்பையா கோரிக்கைகளை விளக்கி பேசினார். ஆர்ப்பாட்டத்தில் சத்துணவு ஊழியர்களை அரசு ஊழியராக அறிவிக்க வேண்டும். காலம் முறை ஊதியத்தை வழங்க வேண்டும். தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றி தரக்கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பின்னர் ஒன்றிய ஆணையரிடம் மனு வழங்கப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


Next Story