தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர்கள் கூட்டணி சார்பில் ஆர்ப்பாட்டம்
திருப்பத்தூரில் தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர்கள் கூட்டணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில், திருப்பத்தூரில் கிருஷ்ணகிரி ரோட்டில் உள்ள மாவட்ட கல்வி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் வி.சி.பாபு தலைமை வகித்தார். மாநில செயற்குழு உறுப்பினர் கலைவாணன், மாவட்ட பொறுப்பாளர்கள் சங்கர், சிவக்குமார், அறிவழகன் முன்னிலை வகித்தனர். மாநில பொருளாளர் ஜெ.மாத்தேயு, மாநில துணைத்தலைவர் எஸ்.ரஞ்சன் தயாள்தாஸ், மாநில செயலாளர் எஸ்.டேவிட்ராஜன் ஆகியோர் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார்கள்.
இதில் தமிழ்நாடு அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் அரசின் குறுநில மன்னர்களை வைத்து வரி வசூல் செய்வதை போல சில வட்டார கல்வி அலுவலர்களை வைத்து வசூல் செய்வதாக மாவட்ட தொடக்க கல்வி அலுவலரை கண்டித்தும், கல்வித்துறை அவர் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் கோஷங்கள் எழுப்பினார்கள். ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர்கள் ஞானசேகரன், சீனிவாசன், கந்திலி வட்டார செயலாளர்கள் திருநாவுக்கரசு, பரசுராமன், தலைவர் ரமேஷ், உள்பட ஏராளமான ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். முடிவில் பொருளாளர் மகேஸ்வரி நன்றி கூறினார்.