தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்


தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்
x

ஆரணி தாலுகா அலுவலகம் முன்பு தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

திருவண்ணாமலை

ஆரணி

ஆரணி தாலுகா அலுவலகம் முன்பு தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. வட்டக் கிளை தலைவர் கோபால் தலைமை தாங்கினார்.

வட்ட செயலாளர் பாஸ்கரன் முன்னிலை வகித்தார். வட்ட மகளிரணி செயலாளர் லோகசுந்தரி வரவேற்றார்.

சிறப்பு அழைப்பாளராக மாவட்ட பொருளாளர் ஜெயச்சந்திரன் கலந்துகொண்டு பேசினார்.

ஆர்ப்பாட்டத்தில் தூத்துக்குடி மாவட்டம் வைகுண்டம் தாலுகா முறப்பநாடு கிராம நிர்வாக அலுவலர் லூர்து பிரான்ஸிஸ் மணல் கடத்தலை தடுத்தார்.

இதனால் அவரை கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்தில் புகுந்து சரமாரியாக வெட்டி கொலை செய்துள்ளனர்.

அவரை தாக்கியவர்களை கைது செய்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், அவரது குடும்பத்திற்கு அரசு ரூ.1 கோடி நிவாரணம் வழங்க வேண்டும், அவரின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும்.

தமிழக அரசு பணி பாதுகாப்பு சட்டத்தினை கொண்டு வர வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.

இதில் துணை செயலாளர் சிவகுமார், இணை செயலாளர் ரமேஷ்குமார், போராட்டக்குழு தலைவர் விநாயகம், ஒருங்கிணைப்பாளர் சரவணன், துணை செயலாளர் புருஷோத்தமன், அமைப்பு செயலாளர்கள் இளவரசன், உள்பட பலர் கலந்து கொண்டனர்.

முடிவில் வட்ட பொருளாளர் ராமச்சந்திரன் நன்றி கூறினார்.


Next Story