அனைத்து கிறிஸ்தவ திருச்சபைகள் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம்


அனைத்து கிறிஸ்தவ திருச்சபைகள் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 13 Aug 2023 7:04 PM IST (Updated: 13 Aug 2023 7:13 PM IST)
t-max-icont-min-icon

வாணியம்பாடியில் அனைத்து கிறிஸ்தவ திருச்சபைகள் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

திருப்பத்தூர்

மணிப்பூர் மாநிலத்தில் நடைபெற்று வரும் பெண்கள் மீதான வன்கொடுமைகள், இனக்கலவரம், மதகலவரம் ஆகியவற்றை தடுத்து நிறுத்தக்கோரி அனைத்து கிறிஸ்தவ திருச்சபைகளின் கூட்டமைப்பு சார்பில் வாணியம்பாடி பஸ்நிலையம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு போதகர் சுரேஷ் பால் எபினேசர் தலைமை தாங்கினார். போதகர்கள் சார்லஸ், மகேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். போதகர் ஹென்றி தங்கராஜ் வரவேற்று பேசினார்.

பல்வேறு திருச்சபைகளை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டு பேசினர். கிறிஸ்தவ மத போதகர்கள், கிறிஸ்தவ அமைப்பினர் கலந்துகொண்டு கண்டன வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கைகளில் ஏந்தி மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் இஸ்லாமிய அமைப்பை சேர்ந்த நிர்வாகிகள், கிறிஸ்தவ அமைப்பினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

வாணியம்பாடி நகர தி.மு.க. செயலாளர் வி.எஸ்.சாரதி குமார் மற்றும் பல்வேறு கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தனர்.


Next Story