விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம்


விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம்
x

கே.வி.குப்பத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

வேலூர்

கே.வி.குப்பம்

கே.வி.குப்பம் பஸ்நிலையம் அருகில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கே.வி.குப்பம் தொகுதி செயலாளர் மு.சுரேஷ்குமார் தலைமை தாங்கினார். துணை செயலாளர் ம.சங்கர் வரவேற்றார். நாடாளுமன்ற தொகுதி செயலாளர் சிவ.செல்லபாண்டியன், மேற்கு மாவட்ட செயலாளர் சே.சந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பெட்ரோல், டீசல், கியாஸ் விலை உயர்வை திரும்பப் பெற வேண்டும். பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயம் ஆக்கக் கூடாது. தமிழ்நாட்டில் அரசுப் பணியிடங்களை தமிழருக்கே வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


Related Tags :
Next Story