மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம்
அடிப்படை வசதிகள் கேட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
கண்ணமங்கலம்
கண்ணமங்கலம் அருகே சந்தவாசல் பகுதியில் மக்களின் அடிப்படை வசதிகளை நிறைவேற்ற வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.
சந்தவாசல் கிளை செயலாளர் சிவக்குமார் தலைமை தாங்கினார். வ.உ.சி. நகர் கிளை செயலாளர் பாஸ்கரன் முன்னிலை வகித்தார். மாவட்ட செயலாளர் சிவக்குமார் கண்டன உரையாற்றினார்.
ஆர்ப்பாட்டத்தில் சந்தவாசல் வ.உ.சி. நகரில் வீடின்றி வசிக்கும் மக்களுக்கு வீட்டு மனைப்பட்டா வழங்க வேண்டும். சந்தவாசல் பாரதியார் நகர் மண்சாலையை தார் சாலையாக அமைக்க வேண்டும்.
சந்தவாசல் அரசு மேல்நிலைப் பள்ளியில் சிரியர் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும். சந்தவாசலில் நேரடி கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.
முடிவில் சரவணன் நன்றி கூறினார்.
அதைத்தொடர்ந்து அங்கு போளூர் மண்டல துணை தாசில்தார் தட்சணாமூர்த்தி வந்து, ஆர்ப்பாட்டம் நடத்தியவர்களின் கோரிக்கைகள் ஒரு மாத காலத்திற்குள் நிறைவேற்றப்படும் என உறுதியளித்தார்.
இதையடுத்து ஆர்ப்பாட்டத்தை கைவிட்டனர்.