மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம்


மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில்  ஆர்ப்பாட்டம்
x

செங்கத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

திருவண்ணாமலை

செங்கம்

செங்கத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

செங்கம் பேரூராட்சியில் பொதுமக்களின் அடிப்படை கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் தாலுகா அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு நகர செயலாளர் சரவணன் தலைமை தாங்கினார். வட்டார செயலாளர் லட்சுமணன், மாவட்ட நிர்வாக குழு சி.எம்.பிரகாஷ் உள்பட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட கட்சியினர் செங்கம் பேரூராட்சியில் அரசு திருமண மண்டபம் அமைத்திட வேண்டும், போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த புறவைச்சாலை அமைத்தல், புதிய பஸ் நிலையத்தின் உள்ளே மின் விளக்குகள், குடிநீர் வசதி, இலவச கழிவறை வசதி ஏற்படுத்த வேண்டும், வருவாய் ஆய்வாளர் அலுவலகம் அருகே உள்ள குளத்தை தூர்வாரி பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும், போக்குவரத்திற்கு இடையூறாக சுற்றி தெரியும் கால்நடைகளை பிடிக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை கோஷங்கள் எழுப்பினர்.


Next Story