மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம்


மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம்
x

குடியாத்தத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

வேலூர்

குடியாத்தம் நகரம் மற்றும் தாலுகா, பேரணாம்பட்டு நகரம் மற்றும் தாலுகா மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் குடியாத்தம் பழைய பஸ் நிலையம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு குடியாத்தம் நகர செயலாளர் பி. காத்தவராயன், குடியாத்தம் மற்றும் பேரணாம்பட்டு தாலுகா செயலாளர்கள் எஸ்.சிலம்பரசன், சி.சரவணன் ஆகியோர் தலைமை தாங்கினார்கள்.

திரிபுரா மாநிலத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் எதிர்க்கட்சி நிர்வாகிகள் மீது தாக்குதல் நடத்துவதாக பா.ஜ.க. அரசை கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் மாநில குழு உறுப்பினர் எஸ்.டி.சங்கரி, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் கே.ஜே.சீனிவாசன். செ.ஏகலைவன், மாவட்ட குழு உறுப்பினர்கள் பி.குணசேகரன், வி.குபேந்திரன் ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள். கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.


Next Story