மாற்றுத்திறனாளி பெண்ணை பலாத்காரம் செய்த வக்கீலை கைது செய்யக்கோரி ஆர்ப்பாட்டம்
மாற்றுத்திறனாளி பெண்ணை பலாத்காரம் செய்த வக்கீலை கைது செய்யக்கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகம் எதிரே தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் ஆகியவை சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கண்டமங்கலம் ஒன்றியம் விநாயகபுரம் கிராமத்தில் 21 வயதுடைய மாற்றுத்திறனாளி பெண்ணை பலாத்காரம் செய்த வக்கீல் பிரபுவை கைது செய்யக்கோரி நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க மாவட்ட தலைவர் தமிழ்செல்வி தலைமை தாங்கினார். மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்க மாவட்ட தலைவர் முருகன், ஜனநாயக மாதர் சங்க மாவட்ட பொருளாளர் உமா ஆகியோர் முன்னிலை வகித்தனர். அகில இந்திய துணைத்தலைவர் சுதா கண்டன உரையாற்றினார்.
இதில் ஜனநாயக மாதர் சங்க மாநில துணை செயலாளர் கீதா, மாவட்ட செயலாளர் உமாமகேஸ்வரி, பொருளாளர் இலக்கியலட்சுமி, மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்க மாநிலக்குழு உறுப்பினர் ராதாகிருஷ்ணன், மாவட்ட செயலாளர் கிருஷ்ணமூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.