அரசு ஆஸ்பத்திரியை பயன்பாட்டுக்கு கொண்டு வர கோரி ஆர்ப்பாட்டம்
அரசு ஆஸ்பத்திரியை பயன்பாட்டுக்கு கொண்டு வர கோரி ஆர்ப்பாட்டம் நடந்தது.
நீலகிரி
மஞ்சூர்,
குந்தா தாலுகாவில் எமரால்டு அரசு ஆஸ்பத்திரியை கடந்த 6 மாதத்திற்கு முன்பு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் திறந்து வைத்தார். ஆனால், இந்த அரசு ஆஸ்பத்திரி இதுவரை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வரவில்லை என்று தெரிகிறது. இதனால் எமரால்டு மற்றும் சுற்றுவட்டார பகுதி நோயாளிகள் ஊட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு செல்ல வேண்டி உள்ளதாக பொதுமக்கள் தெரிவித்தனர். இந்தநிலையில் எமரால்டு அரசு ஆஸ்பத்திரியை பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என வலியுறுத்தி நீலகிரி மாவட்ட மக்கள் தேச கட்சி சார்பில் ஆஸ்பத்திரி முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு கட்சி செயலாளர் ஆனந்த் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் சிவா, பொருளாளர் மயில் வாகனம், இளைஞரணி செயலாளர் ஆசை பிரவின் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story