தியாகராஜ பாகவதர் மணிமண்டபத்தை திறக்கக்கோரி ஆர்ப்பாட்டம்
தியாகராஜ பாகவதர் மணிமண்டபத்தை திறக்கக்கோரி ஆர்ப்பாட்டம்
திருச்சி
திருச்சி கலெக்டர் அலுவலகம் அருகே விஸ்வ ஜனசக்தி தொழிற்சங்க பேரவை சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு திருச்சி மாவட்ட தலைவர் சந்திரசேகர் தலைமை தாங்கினார். மாநில அமைப்பு செயலாளர் முருகன் வரவேற்றார். சிறப்பு விருந்தினராக மாநில பொதுச் செயலாளர் மகேஸ்வரன் கலந்து கொண்டு ஆர்ப்பாட்டம் குறித்து விளக்க உரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில் திருச்சி மத்திய பஸ் நிலையத்தில் எம். கே. தியாகராஜ பாகவதர் மணிமண்டபம் கட்டி முடிக்கப்பட்டு பல மாதங்கள் ஆகியும் இன்னும் திறக்கப்படாததை கண்டித்து கோஷம் எழுப்பப்பட்டது.
Related Tags :
Next Story