அடிப்படை வசதிகளை ஏற்படுத்தக்கோரி ஆர்ப்பாட்டம்


அடிப்படை வசதிகளை ஏற்படுத்தக்கோரி ஆர்ப்பாட்டம்
x

அடிப்படை வசதிகளை ஏற்படுத்தக்கோரி ஆர்ப்பாட்டம் நடந்தது.

பெரம்பலூர்

வேப்பந்தட்டை:

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை பஸ் நிலையம் அருகே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு வட்ட குழு உறுப்பினர் கோவிந்தன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தின்போது, தாலுகா தலைமை இடமான வேப்பந்தட்டையில் அடிப்படை தேவைகளான அரசு ஆரம்ப சுகாதார நிலையம், பஸ் நிலையம், வேளாண்மை கல்லூரி, போலீஸ் நிலையம் மற்றும் தீயணைப்பு நிலையங்களை ஏற்படுத்தித் தர வேண்டும், நில அளவை துறையில் நிலத்தை அளந்து அத்து காட்ட பணம் கட்டி விண்ணப்பித்த விவசாயிகளுக்கு உடனடியாக நிலத்தை அளந்து அத்து காட்ட வேண்டும். ஊராட்சிகளில் 100 நாள் வேலை திட்ட பயனாளி அட்டையில் வறுமைக்கோடு முத்திரை இட்டு தொழிலாளர்களை பிரித்தாலும் சூழ்ச்சியை கைவிட்டு, தினக்கூலி ரூ.294-ஐ முழுமையாக தொழிலாளர்களுக்கு வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கட்சி நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story