வீட்டுமனைப்பட்டா வழங்கக்கோரி ஆர்ப்பாட்டம்
கோவில் இடங்களில் குடியிருப்பவர்களுக்கு வீட்டுமனைப்பட்டா வழங்கக்கோரி ஆர்ப்பாட்டம்
மயிலாடுதுறை
மயிலாடுதுறை சித்தர்காட்டில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் அலுவலகம் முன்பு கோவில் இடத்தில் குடியிருப்போருக்கு வீட்டுமனைப்பட்டா வழங்கக்கோரி தமிழ்நாடு அனைத்து சமய நிலங்களை பயன்படுத்துவோர் பாதுகாப்பு சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் ராயர் தலைமை தாங்கினார். மாவட்ட இணை செயலாளர் மேகநாதன், மாவட்ட பொருளாளர் ராமலிங்கம், மாவட்ட துணை தலைவர்கள் முருகேசன், மாயகிருஷ்ணன், விஜயா, தங்கப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் அதன் மாநில செயலாளர் சாமி.நடராஜன் கலந்துகொண்டு பேசினார். கோவில் நிலங்களில் குடியிருக்கும் ஏழைகளுக்கு உடனே வீட்டுமனைப்பட்டா வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன.
Related Tags :
Next Story