பால் விலையை உயர்த்தக்கோரி ஆர்ப்பாட்டம்


பால் விலையை உயர்த்தக்கோரி ஆர்ப்பாட்டம்
x

பால் விலையை உயர்த்தக்கோரி பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அரியலூர்

அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி அருகே உள்ள இடைக்கட்டு கிராமத்தில் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம் முன்பு பால் உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில் பால் விலையை உயர்த்தி தரக்கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் சங்க தலைவர் கிருஷ்ணமூர்த்தி தலைமை தாங்கினார். இதில் கறவை மாடுகளை கையில் பிடித்துக் கொண்டு விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் பசும்பால் லிட்டருக்கு ரூ.42, எருமைப்பால் லிட்டருக்கு ரூ.51 ஆக விலை உயர்த்தி வழங்க வேண்டும். பால் உற்பத்தியாளர் சங்கத்தில் 5 ஆண்டுகளாக மகாசபை கூட்டம் நடக்காததை கண்டித்தும், 6 மாதத்திற்கு ஒருமுறை மகாசபை கூட்டம் நடத்த கோரியும், பால் உற்பத்தியாளர்களுக்கு விலைவாசி உயர்வுக்கு ஏற்ப தீவனத்தை குறைந்த விலைக்கு வழங்க வேண்டும். பால் அதிகளவில் கொள்முதல் செய்வதால் கூடுதலாக பால் குளிரூட்டும் நிலையம் 5000 லிட்டர் கொள்ளளவில் அமைக்க வேண்டும். பால் உற்பத்தியாளர்களுக்கு கறவை மாடு லோன் வழங்க வேண்டும். தீபாவளியையொட்டி பால் உற்பத்தியாளர்களுக்கு போனஸ் வழங்கிட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.


Next Story