குடிநீர் பிரச்சினையை தீர்க்க கோரி ஆர்ப்பாட்டம்
சாயல்குடி அருகே சிக்கல் கிராமத்தில் குடிநீர் பிரச்சினையை தீர்க்க கோரி ஆர்ப்பாட்டம் நடந்தது.
ராமநாதபுரம்
சாயல்குடி,
சாயல்குடி அருகே சிக்கல் கிராமத்தில் சிக்கல் கிராம மக்கள் ஒற்றுமை குழு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு குழு தலைவர் அம்சத்கான் தலைமை தாங்கினார். பொருளாளர் ஜெயக்குமார் முன்னிலை வகித்தார். செயலாளர் பச்சமால், மாவட்ட விவசாய சங்க செயலாளர் மயில்வாகனன் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர்.
ஆர்ப்பாட்டத்தில் சிக்கல் கிராமத்தில் குடிநீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும். சிக்கல் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர்கள் வருகிற 14-ந் தேதி கலெக்டரை சந்தித்து பதவியை ராஜினாமா செய்ய போவதாகவும் ஆர்ப்பாட்டத்தில் தெரிவித்தனர்.
இதில் துணைத் தலைவர் நூருல் அமீன், வார்டு உறுப்பினர்கள் கற்பகவள்ளி பாலாமணி, செய்யது அம்மாள் காஜா முகம்மது, போதும் பொண்ணு, சங்கர், யூசுப், ரமேஷ், உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
Related Tags :
Next Story