சீர்வரிசை கொண்டு சென்றவர்களை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி ஆர்ப்பாட்டம்
சீர்வரிசை கொண்டு சென்றவர்களை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி ஆர்ப்பாட்டம் நடந்தது.
அரியலூர்
தாமரைக்குளம்:
அரியலூர் அண்ணா சிலை அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தா.பழூரை அடுத்த காசங்கோட்டையில் சீர்வரிசை கொண்டு சென்ற ஆதிதிராவிடர் மக்களை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும், தாக்குதலில் ஈடுபட்டவர்களை கைது செய்யாததை கண்டித்தும் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்துக்கு, அக்கட்சியின் தொகுதி செயலாளர் மருதவாணன் தலைமை தாங்கினார். மாநில துணை செயலாளர் அன்பானந்தம் கண்டனம் தெரிவித்து பேசினார். மாநில துணை செயலாளர்கள் கருப்புசாமி, கொளஞ்சி, தேர்தல் பிரிவு மாநில துணை செயலாளர் தனக்கோடி, செய்தித் தொடர்பாளர் சுதாகர் உள்ளிட்டோர் கலந்து கொண்டு கோஷங்களை எழுப்பினர்.
Related Tags :
Next Story