மல்பெரி சாகுபடி குறித்து விவசாயிகளுக்கு செயல்விளக்க பயிற்சி


மல்பெரி சாகுபடி குறித்து விவசாயிகளுக்கு செயல்விளக்க பயிற்சி
x

நெய்வேலியில் மல்பெரி சாகுபடி குறித்து விவசாயிகளுக்கு செயல்விளக்க பயிற்சி அளிக்கப்பட்டது.

கடலூர்

கடலூர்,

பட்டு வளர்ச்சி துறையும், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையும் இணைந்து அட்மா திட்டத்தின் கீழ் மல்பெரி சாகுபடி மற்றும் பட்டுப்புழு வளர்ப்பு குறித்த விவசாயிகளுக்கான பயிற்சி முகாமை நெய்வேலி இந்திரா நகர் பண்ணையில் நடத்தியது. இதற்கு குறிஞ்சிப்பாடி வேளாண்மை உதவி இயக்குனர் பூவராகன் தலைமை தாங்கி, பயிற்சியை தொடங்கி வைத்து திட்ட விளக்க உரையாற்றினார். வேளாண்மை அலுவலர் அனுசுயா வரவேற்றார்.

சிறப்பு அழைப்பாளராக பட்டு வளர்ச்சி துறையின் உதவி இயக்குனர் இளையராஜா கலந்து கொண்டு பேசுகையில், விவசாயிகள் தனி பயிராகவும், வரப்பு பயிராகவும் மல்பெரி சாகுபடி செய்யலாம். வீரிய இன மல்பெரி நடவு செய்யவும், பட்டுப்புழு வளர்ப்பு கூடம் அமைக்கவும் நவீன பட்டு புழு வளர்ப்பு தளவாடங்கள் வாங்குவதற்கும் மானியம் வழங்கப்படுகிறது என்றார்.

பின்னர் இளநிலை ஆய்வாளர் லட்சுமணபிரசாத், உதவி ஆய்வாளர் மல்லிகா ஆகியோர் பட்டுப்புழு வளர்ப்பு மற்றும் மல்பெரி குச்சிகள் நடும் முறை, சொட்டுநீர் பாசனம் ஆகியன குறித்து விவசாயிகளுக்கு செயல்விளக்க பயிற்சி அளித்தனர். இதில் துணை வேளாண்மை அலுவலர் வெங்கடேசன், வட்டார தொழில்நுட்ப மேலாளர் பிரியாராணி, உதவி வேளாண்மை அலுவலர் ஆரோக்கியதாஸ், உதவி தொழில்நுட்ப மேலாளர் மனோஜ் மறறும் பூதம்பாடி, வரதராஜன்பேட்டை, குருவப்பன்பேட்டை, நைனார்குப்பம் ஆகிய கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் கலந்து கொண்டனர்.


Next Story