பயிறு, உளுந்து சாகுபடி குறித்த செயல்விளக்க பயிற்சி


பயிறு, உளுந்து சாகுபடி குறித்த செயல்விளக்க பயிற்சி
x

நன்னிலம் அருகே பயிறு, உளுந்து சாகுபடி குறித்த செயல்விளக்க பயிற்சி

திருவாரூர்

நன்னிலம்:

நன்னிலம் அருகே பயிறு, உளுந்து சாகுபடி குறித்த செயல்விளக்க பயிற்சி நடந்தது.

உளுந்து விதைப்பு

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் வட்டாரம் வேளாண்மை உழவர் நலத்துறை மாநில விரிவாக்க திட்டங்களுக்கான, உறுதுணை சீரமைப்பு திட்டத்தின் கீழ் நாடாகுடி கிராமத்தில் பண்ணை பள்ளி பயிற்சிக்கான செயல்விளக்கம் நடந்தது.

இதில் பயிறு வகை பயிர்களில் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மையில் உளுந்து விதைப்பு செய்து செயல்விளக்கம் நடந்தது. நிகழ்ச்சிக்கு நன்னிலம் வேளாண்மை உதவி இயக்குனர் ஹேமா ஹெப்சிபா நிர்மலா தலைமை தாங்கினார்.

செயல் விளக்கம்

ஒருங்கிணைப்பு அலுவலர் அனுஷா முன்னிலை வகித்தார். நன்னிலம் வட்டார தொழில்நுட்ப மேலாளர் ராஜா கலந்து கொண்டு செயல்விளக்கமாக ஒரு ஹெக்டர் நிலத்தில் வம்பன்-8 இரக, உளுந்து விதை நேர்த்தி செய்து விதைப்பு செய்வது குறித்து செயல்விளக்கமாக செய்து காண்பித்தார்.

இதில் ஊராட்சி மன்ற தலைவர் செல்வி ஜெயபால், உதவி தொழில் நுட்ப மேலாளர்கள் சரவணன், பிரபாகரன் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.


Next Story