கருப்பு பட்டை அணிந்து ஆர்ப்பாட்டம்


கருப்பு பட்டை அணிந்து ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 1 Oct 2023 12:15 AM IST (Updated: 1 Oct 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

கடலூரில் புதிய பஸ் நிலையத்தை அமைக்கக்கோரி கருப்பு பட்டை அணிந்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கடலூர்

கடலூர்

கடலூர் புதிய பஸ் நிலையத்தை 9 கிலோ மீட்டர் தூரமுள்ள எம்.புதூரில் அமைக்க மாநகராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகம் முடிவு செய்துள்ளது. ஆனால், எம்.புதூர் குறிஞ்சிப்பாடி தொகுதி எனவும், கடலூரின் மையப்பகுதியிலேயே புதிய பஸ் நிலையத்தை அமைக்க வேண்டும் என்றும் அரசியல் கட்சியினர், பல்வேறு அமைப்பினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்த நிலையில் கடலூர் புதிய பஸ் நிலையத்தை நகரின் மையப்பகுதியில், கடலூர் சட்டமன்ற தொகுதியில் அமைக்க வலியுறுத்தி அனைத்து குடியிருப்போர் நலச் சங்கங்களின் கூட்டமைப்பினர் கருப்பு பட்டை அணிந்து கடலூரில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் வெங்கடேசன் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் மாயவேல், முனுசாமி, ராஜேந்திரன், கல்யாணகுமார், ராஜசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இணை பொது செயலாளர் தேவநாதன் வரவேற்றார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் மாதவன் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். அனைத்து பொதுநல இயக்க கூட்டமைப்பின் தலைவர் எஸ்.என்.கே.ரவி, வக்கீல் திருமார்பன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநகர செயலாளர் அமர்நாத் ஆகியோர் கோரிக்கையை வலியுறுத்தி கண்டன உரையாற்றினர். தலைவர் பாலு பச்சையப்பன் தீர்மானங்களை வாசித்தார். கூட்டமைப்பின் சிறப்பு தலைவர் மருதவாணன் நிறைவுரையாற்றினார். இதில் மேலகங்கணாங்குப்பம் ஊராட்சி மன்ற தலைவர் மாறன், இந்திய தேசிய காங்கிரஸ் ரமேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் பொருளாளர் ரமணி நன்றி கூறினார்.


Next Story