உடையாண்டி கிராமத்தில் டெங்கு விழிப்புணர்வு முகாம்


உடையாண்டி கிராமத்தில் டெங்கு விழிப்புணர்வு முகாம்
x

உடையாண்டி கிராமத்தில் டெங்கு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

தூத்துக்குடி

சாத்தான்குளம்:

சாத்தான்குளம் அருகே உடையாண்டி கிராமத்தில் சாலைபுதூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் டெங்கு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

முகாமுக்கு மாவட்ட பூச்சியியல் வல்லுனர் கருப்பசாமி தலைமை வகித்து டெங்கு நடவடிக்கை குறித்து விளக்கம் அளித்தார். இளம் பூச்சியியல் வல்லுனர் கணேசன் பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கினார். இதில் சுகாதார ஆய்வாளர்கள் ஜேசுராஜ், மகேஷ்குமார், சுகாதார செவிலியர் சொர்ணலதா, மகேஸ்வரி உள்ளிட்ட ஆஷா, டெங்கு மஸ்தூர் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

இதையடுத்து கருங்கடல் டி.என்.டி.டி.ஏ. நடுநிலைப்பள்ளியில் வளர் இளம் குழந்தைகளுக்கு நலதிட்ட முகாம் நடைபெற்றது. இதில் மாவட்ட பூச்சியியல் வல்லுனர் கருப்பசாமி, இளம் பூச்சியியல் வல்லுனர் கணேசன், சுகாதார ஆய்வாளர் ஜேசுராஜ் ஆகியோர் வளம் இளம் குழந்தைகளுக்கு ஊட்டசத்து உணவு, மற்றும் டெங்கு தடுப்பு பணி குறித்து விளக்கினர். கிராம சுகாதார செவிலியர் ரமா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


Next Story